/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அப்பாடா...ஒரு வழியாக தாயுடன் சேர்ந்தது குட்டியானை! அப்பாடா...ஒரு வழியாக தாயுடன் சேர்ந்தது குட்டியானை!
அப்பாடா...ஒரு வழியாக தாயுடன் சேர்ந்தது குட்டியானை!
அப்பாடா...ஒரு வழியாக தாயுடன் சேர்ந்தது குட்டியானை!
அப்பாடா...ஒரு வழியாக தாயுடன் சேர்ந்தது குட்டியானை!
ADDED : ஜூன் 21, 2025 12:12 AM
மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில், பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில், குட்டியானை ஒன்று கடந்த 18ம் தேதி தனியாக நின்றிருப்பதை, ரோந்து சென்ற வனப்பணியாளர்கள் பார்த்தனர்.
பின் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க, வனப்பணியாளர்கள் தாய் யானை மற்றும் அதனுடன் உள்ள யானை கூட்டம், எங்குள்ளது என அருகில் உள்ள, வனப்பகுதிகளில் தேடினர்.
அதே சமயம் குட்டி யானை, அருகில் செல்லாமல் வனப்பணியாளர்கள் அந்த யானையை கண்காணித்தனர்.
இதனிடையே நேற்று முன் தினம், குட்டி யானையின் தாய் யானை கண்டுபிடிக்கப்பட்டது.
குட்டி யானை, தாய் யானையுடன் தானாகவே சென்று சேரும் படி, வனப்பணியாளர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
முயற்சியின் ஒருபகுதியாக, தூரத்தில் இருந்தவாறே குட்டி யானை, தாய் யானையின் இருப்பிடத்திற்கு செல்ல சத்தம் போட்டு, சத்தம் போட்டு குட்டி யானைக்கு வழிகாட்டினர். இறுதியாக, குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.