Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாஸ்ட் புட் தவிர்த்து சத்துணவு :என்.எஸ்.எஸ்., முகாமில் அறிவுரை

பாஸ்ட் புட் தவிர்த்து சத்துணவு :என்.எஸ்.எஸ்., முகாமில் அறிவுரை

பாஸ்ட் புட் தவிர்த்து சத்துணவு :என்.எஸ்.எஸ்., முகாமில் அறிவுரை

பாஸ்ட் புட் தவிர்த்து சத்துணவு :என்.எஸ்.எஸ்., முகாமில் அறிவுரை

ADDED : ஜன 28, 2024 11:29 PM


Google News
அன்னுார்:'பாஸ்ட் புட்டை தவிர்த்து, சத்தான உணவு உட்கொள்ள வேண்டும்,' என என்.எஸ்.எஸ்., முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், காரமடை ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் பொகலூர் ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. முகாமில் பள்ளி வளாகம் சீரமைத்தல், வர்ணம் பூசுதல், கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்துதல், மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக்கன்று நடுதல், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடந்தன.

முகாமில் கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். பொகலூர் ஊராட்சி தலைவர் நடராஜன், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் பேசுகையில், ''மாணவர்கள் பாஸ்ட் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். சத்தான புரதச்சத்து மிகுந்த உணவுகள் சிறுதானிய உணவுகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தால் உடல் நலம் கெடும். பண விரயம் என அந்த குடும்பமே பாதிக்கப்படும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறை தலைவர் சண்முகப்பிரியா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us