ADDED : ஜூன் 27, 2025 11:20 PM
கோவை; கோவை நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய நீதிபதிகள் பொறுப்பேற்று கொண்டனர்.
திருவாரூர் சி.ஜே.எம்.,கோர்ட் நீதிபதி சுந்தர்ராஜ், கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
அதே போல, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிவகுமார், நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக மகேஸ்வரி பானுரேகா, கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட் நீதிபதியாக ராஜலிங்கம் ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர்.