/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது
கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது
கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது
கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது
ADDED : ஜூன் 11, 2025 06:41 AM
கோவை; துணைவேந்தர் பொறுப்புக்குழுவை ஏற்படுத்த, தேவையான நடவடிக்கைகளை பாரதியார் பல்கலை துவங்கியுள்ளது.
பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. துணைவேந்தர் இல்லாததால், அவரது பணிகளை கவனிக்க நான்கு பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவினரின் பணிக்காலம் மே, 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மட்டுமே பொறுப்புக்குழுவில் உள்ளார். பல்கலையில், தற்போது துணைவேந்தரும் இல்லை; துணைவேந்தர் பொறுப்புக்குழுவும் இல்லை.
இதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, மீண்டும் ஒரு துணைவேந்தர் பொறுப்புக்குழுவை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை, பல்கலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.