/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி ரோடு மேம்பால பணி ஜூலை 30க்குள் நிறைவடையும்; அமைச்சர் வேலு உறுதி அவிநாசி ரோடு மேம்பால பணி ஜூலை 30க்குள் நிறைவடையும்; அமைச்சர் வேலு உறுதி
அவிநாசி ரோடு மேம்பால பணி ஜூலை 30க்குள் நிறைவடையும்; அமைச்சர் வேலு உறுதி
அவிநாசி ரோடு மேம்பால பணி ஜூலை 30க்குள் நிறைவடையும்; அமைச்சர் வேலு உறுதி
அவிநாசி ரோடு மேம்பால பணி ஜூலை 30க்குள் நிறைவடையும்; அமைச்சர் வேலு உறுதி
ADDED : ஜூன் 11, 2025 06:40 AM

கோவை; ''அடுத்த மாதம், 30ம் தேதிக்குள் அவிநாசிரோடு மேம்பாலக் கட்டுமானப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகி விடும்.'' என, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கோவை காந்திபுரத்தில் தமிழக அரசு சார்பில், புதிய நுாலகம் கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, புதிய நுாலக கட்டுமானப்பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களை கொண்ட இந்த நுாலகத்துக்காக, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
டிச., 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரியில் நுாலகத்தை திறக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
அவிநாசி ரோடு மேம்பால கட்டுமானப்பணிகளை பொறுத்தவரை, 95 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. கோல்டு வின்ஸ் பகுதியில் நடக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. எட்டு ஏறுபாலம் - இறங்கு பாலங்களில், ஐந்து பாலங்களின் பணிகள் முடிந்துள்ளன.
மீதம் உள்ள பாலங்களின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அடுத்த மாதம், 30ம் தேதிக்குள் அவிநாசிரோடு மேம்பாலக் கட்டுமானப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.