ADDED : ஜன 05, 2024 11:21 PM

சூலுார்:சூலூர் அடுத்த பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், அன்னை சாரதா தேவியின், 172வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை, 6:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் துவங்கிய விழாவில், லலிதா சகஸ்ர நாமம் அர்ச்சனை செய்யப்பட்டது.
சிறப்பு ஆரத்திக்கு பிறகு, விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் அர்ச்சனை செய்தனர்.
மாலை, 6:00 மணிக்கு நாம சங்கீர்த்தனத்துடன் கோவில் வலம் மற்றும் ஆரத்தி நடந்தது. ஸ்ரீ சாரதா தேவி அஷ்டோத்திர நாமாவளி மற்றும் குங்கும அர்ச்சனை நடந்தது.
'அன்பின் மொழி எங்கள் சாரதா' என்ற தலைப்பில், அகில இந்திய சேவா இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமினி குருப்ரியானந்த சரஸ்வதி பேசினார்.