ADDED : செப் 23, 2025 05:21 AM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லூரி சார்பில், மினி மராத்தான் போட்டி நடந்தது.
வித்யாலயா நிறுவன தினத்தை ஒட்டி நடந்த போட்டியை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி செயலாளர் சுவாமி வீரகானந்தர் தலைமையேற்று, கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில், மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர் மகேஷ் முதலிடத்தையும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நிதிஷ்குமார் மற்றும் நிதிஷ் ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு, கோப்பைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரி முதல்வர் ஜெயபால், இணை பேராசிரியர் அமுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.