/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'எல்டர் கான் - 2025' மாநாடு பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'எல்டர் கான் - 2025' மாநாடு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'எல்டர் கான் - 2025' மாநாடு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'எல்டர் கான் - 2025' மாநாடு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'எல்டர் கான் - 2025' மாநாடு
ADDED : செப் 23, 2025 05:21 AM

கோவை; பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் முன்னணி முதியோர் மருத்துவ அமைப்புகள் சார்பில், 'பி.எஸ்.ஜி. எல்டர் கான் - 2025' என்ற மாநிலங்களுக்கு இடையேயான, முதியோர் மருத்துவ மாநாடு நடந்தது.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த முதியோர் மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்து, அறிவியல் பகிர்வு, புதிய சிந்தனைகள், இணைந்த ஆராய்ச்சிகளுக்கான மேடையாக மாநாடு அமைந்தது.
முதியோர் சுகாதாரத்தின் பல்வேறு துறைகள் குறித்த பட்டறைகள், குழு விவாதங்கள், அறிவியல் கருத்தரங்கு நடந்தது. முதியோர் மருத்துவத்துக்கான வாழ்நாள் சாதனை விருது, பத்மஸ்ரீ டாக்டர் நடராஜனுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் முதியோர் சுகாதார பராமரிப்பில், புதிய மாற்றங்களை உருவாக்கும் ஒரு முக்கியமான சந்திப்பாக, இந்த மாநாடு அமைந்தது. 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இணை சுகாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.