/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதாள சாக்கடைக்கு வரி புத்தகம் நிறுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல் பாதாள சாக்கடைக்கு வரி புத்தகம் நிறுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல்
பாதாள சாக்கடைக்கு வரி புத்தகம் நிறுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல்
பாதாள சாக்கடைக்கு வரி புத்தகம் நிறுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல்
பாதாள சாக்கடைக்கு வரி புத்தகம் நிறுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2025 11:17 PM
கோவை; கோவை மாநகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர்கள் குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், கோவை மாநகராட்சி பகுதியில், 1973ல் பாதாள சாக்கடை திட்ட பணி துவக்கப்பட்டது. பல்வேறு கட்டடங்களில் இணைப்பு பெறப்பட்டிருக்கிறது.இப்போது பாதாள சாக்கடை இணைப்புக்கு வரி புத்தகம் கொடுக்கப்படுகிறது.
சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வால் பொதுமக்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணத்தை உயர்த்தினால், மிகப் பெரிய அளவில் பொருளாதார சுமை ஏற்படும்.
பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை, பராமரிப்பு கட்டணம் வசூலிக்கக் கூடாது. வீடு வீடாக பாதாள சாக்கடை வரிக்கு, புத்தகம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள ரோடுகளால், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
பணி முடிந்த இடங்களில், 'வெட்மிக்ஸ்' அல்லது வெள்ளை மண் கொட்ட வேண்டும். அதன்பின், அடுத்த கட்ட பணிகளை துவக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அவை தலைவர் அர்ஜுனராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், உயர்நிலை குழு உறுப்பினர் மோகன்குமார், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுபதி, மாநில சட்ட துறை செயலாளர் சூரி நந்தகோபால், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் தியாகு, துாயமணி மற்றும் கவுன்சில் குழு தலைவர் சித்ரா, கவுன்சிலர்கள் தர்மராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.