/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணிதமும் எளிது, வணிகவியலும் எளிது; பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி கணிதமும் எளிது, வணிகவியலும் எளிது; பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
கணிதமும் எளிது, வணிகவியலும் எளிது; பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
கணிதமும் எளிது, வணிகவியலும் எளிது; பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
கணிதமும் எளிது, வணிகவியலும் எளிது; பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 24, 2025 11:57 PM

அன்னுார்; கணிதமும், வணிகவியலும் எளிதாக இருந்தது என பிளஸ் 1 மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வு நடந்தது.
அதிக மதிப்பெண் பெற முடியும்
ரேஷ்மா, கெம்பநாயக்கன்பாளையம்:
கலைப்பிரிவு மாணவர் களுக்கு வணிகவியல் தேர்வு நடந்தது. 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.
தேர்ச்சி பெறுவது உறுதி
அருண் பிரசாத், சொக்கம்பாளையம்:
வணிகவியல் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம். ஒன்று, இரண்டு மதிப்பெண் கேள்விகள் மிக எளிது. மூன்று மதிப்பெண் கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் ஆசிரியர் கூறியதில் இருந்து வந்திருந்தது.
கணிதம் எளிது
குகன்ராஜ், தெலுங்குபாளையம்:
முதல் குரூப் மாணவர்களுக்கு கணித தேர்வு நடந்தது. 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன.
மிக எளிது
ஹரிஷ் தெலுங்குபாளையம்:
கணித தேர்வு எளிதாக இருந்தது. தேர்ச்சி பெறுவது எளிது. மூன்று மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன.
இன்று (25ம் தேதி) பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கிறது.