Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூட்டிய வீட்டில் திருடியவன் போலீசிடம் ஒப்படைப்பு

பூட்டிய வீட்டில் திருடியவன் போலீசிடம் ஒப்படைப்பு

பூட்டிய வீட்டில் திருடியவன் போலீசிடம் ஒப்படைப்பு

பூட்டிய வீட்டில் திருடியவன் போலீசிடம் ஒப்படைப்பு

ADDED : செப் 07, 2025 06:46 AM


Google News
கோவை : சின்னியம்பாளையம் அருகே தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவாசகம், 32. பொள்ளாச்சியில் உள்ள பேப்பர் மில்லில் பணிபுரிகிறார். இவரது வீட்டின் அருகே பரமேஸ்வரி என்பவர் குடியிருந்து வருகிறார். சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்கு பரமேஸ்வரி சென்றிருக்கிறார்.

இந்நிலையில், 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு 'வாக்கிங்' செல்வதற்காக வீட்டில் இருந்து மணிவாசகம் சென்றார். பரமேஸ்வரி வீட்டின் முன்பகுதியில் மின்விளக்கு ஒளிர்ந்தது. சந்தேகமடைந்த மணிவாசகம், காம்பவுண்ட் கேட்டை திறந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஒருவர் இருந்தார்.

வீட்டுக் கதவின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்த அவர், அக்கம்பக்கத்தினரை அழைத்து, அவர்களது உதவியுடன் வீட்டுக்குள் இருந்த நபரை பிடித்தார். பீளமேடு போலீசார் விசாரித்ததில், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடிசைகள் கணேஷ் நகரை சேர்ந்த செல்வம், 52 எனத் தெரிந்தது. வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிக்கொலுசு, ரூ.2,000 பணம் ஆகியவற்றை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us