/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுவற்றில் துளையிட்டு நகை திருட முயன்றவர் கைதுசுவற்றில் துளையிட்டு நகை திருட முயன்றவர் கைது
சுவற்றில் துளையிட்டு நகை திருட முயன்றவர் கைது
சுவற்றில் துளையிட்டு நகை திருட முயன்றவர் கைது
சுவற்றில் துளையிட்டு நகை திருட முயன்றவர் கைது
ADDED : மே 29, 2025 11:49 PM
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே நகைக்கடை சுவற்றில் துளை போட்டு நகைகளை திருட முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் போலீசார் இரவு நேர ரோந்து சென்றனர். அப்போது, சிறுமுகை நால்ரோடு சாலையில் உள்ள தனியார் நகைக்கடை சுவற்றில் துளை போட்டு இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சுவற்றில் துளை போட்டு நகைகளை திருட முயன்ற சிறுமுகையை சேர்ந்த மூர்த்தி, 43, கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.---