/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுக்கரை மார்க்கெட் ரோடெங்கும் பள்ளம், மேடு! வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து மதுக்கரை மார்க்கெட் ரோடெங்கும் பள்ளம், மேடு! வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து
மதுக்கரை மார்க்கெட் ரோடெங்கும் பள்ளம், மேடு! வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து
மதுக்கரை மார்க்கெட் ரோடெங்கும் பள்ளம், மேடு! வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து
மதுக்கரை மார்க்கெட் ரோடெங்கும் பள்ளம், மேடு! வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து

அடிக்கடி விபத்துகள்
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, பலகோடி ரூபாய் மதிப்பில் விரிவுப்படுத்தப்பட்டது. ஆனால், பாதாள சாக்கடைக்கான மூடிகள் உள்ள இடங்களில் பள்ளமாகவும், மேடாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பெரிய விபத்துகளால் உயிரிழப்புகள் நடக்கும் முன், சீரமைக்க வேண்டும்.
இடற வைக்கும் கற்கள்
பீளமேடு, துக்கினார் வீதியில், குடிநீர் குழாய்க்காக சாலை தோண்டப்பட்டது, பணிகள் முடிந்த பின்னர் சாலையை சரியாக சீரமைக்கவில்லை. ஜல்லி கற்களாக இருக்கும் சாலையில் நடக்கவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது. சைக்கிள் ஓட்டும் குழந்தைகள், கற்கள் இடறி கீழே விழுகின்றனர்.
தெருவிளக்கு பழுது
கோவை மாநகராட்சி, அப்பாச்சி கார்டன், ஒன்பதாவது வார்டு, சேரன் மாநகர், ' எஸ்.பி -28, பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக, தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், அவசர தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியவில்லை.
கடும் துர்நாற்றம்
எல் அண்ட் டி பைபாஸ், செட்டிபாளையம் ரோட்டில், சாலையோரத்தில் சிலர் தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், குப்பையை அகற்ற வேண்டும். குப்பை கொட்டாமல் இருக்க,நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வீணாகும் குடிநீர்
மாநகராட்சி, 70வது வார்டுக்குட்பட்ட அண்ணாதுரை சிலை அருகே, சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி, இன்னும் மூடப்படவில்லை. அத்திக்கடவு குடிநீர் பைப் உடைந்து, பல நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கையில்லை.
தொடரும் ஆக்கிரமிப்பு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட, 32வது வார்டு, காந்திஜி ரோடு, பிரதான சாலையில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சாலையின் இருபுறமும் வாகனங்கள்நிறுத்தப்படுகின்றன. இதனால், 60 அடி சாலை வெறும் 25 அடியாக சுருங்கி விட்டது. பாதசாரிகள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சிக்னலை மதிப்பதில்லை
அவிநாசி ரோடு, பீளமேடு பஸ் ஸ்டாப் முன்புறமும், கிருஷ்ணம்மாள் கல்லுாரி அருகிலும், பாதசாரிகள் சாலையை கடக்க, தானியங்கி டைமர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் யாரும் இந்த சிக்னலை மதித்து, வாகனங்களை நிறுத்துவதில்லை. போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை அருகே அசுத்தம்
குனியமுத்துார், 88வது வார்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை முன்பு தொடர்ந்து கட்டடக்கழிவு, குப்பையை வீசிச்செல்கின்றனர். மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில், உள்ள கழிவு அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
தெருவிளக்கு பழுது
ஆர்.எஸ்.புரம், 71வது வார்டு, 'எஸ்.பி -11, பி - 2' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. அருகிலுள்ள பெரிய மரத்தின், உடைந்த கிளைகளும் மின்ஒயர்களில் உரசும்படி உள்ளன.
வளைவில் கவிழ்க்கும் பள்ளம்
கோவை மாநகராட்சி, 43வது வார்டு, நஞ்சேகவுண்டன்புதுார் சந்திப்பில் சாலை வளைவில், சாக்கடை கால்வாய் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்து, பெரிய பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் வளைவில் திரும்பும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.