ADDED : ஜன 05, 2024 11:17 PM

பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இனிமை இலக்கிய வட்டம் மாதாந்திர அமர்வு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, புத்தகம் வாசித்தல், விமர்சனம் எழுதுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், வானம் ஆறுமுகம், சிறுமுகை செல்வராசு ஆகியோர் பங்கேற்று, 'புத்தகமும் சிற்றிதழும்' என்ற தலைப்பில் பேசினர். தமிழாசிரியர் முனியாண்டி நன்றி கூறினார்.