கர்நாடக அரசிடம் இருந்து 40.43 டி.எம்.சி., தண்ணீரை பெற முயற்சிக்குமா தமிழக அரசு?
கர்நாடக அரசிடம் இருந்து 40.43 டி.எம்.சி., தண்ணீரை பெற முயற்சிக்குமா தமிழக அரசு?
கர்நாடக அரசிடம் இருந்து 40.43 டி.எம்.சி., தண்ணீரை பெற முயற்சிக்குமா தமிழக அரசு?
ADDED : ஜூலை 06, 2024 05:57 PM

தஞ்சாவூர்: காவிரி நதி நீர்பங்கீடு,நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் மாதாந்திர அடிப்படையில், பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் இருந்து தமிழகத்திற்கு, கர்நாடக மாநிலம் 192 டி.எம்.சி., வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பிறகு, கர்நாடக அரசு குடிநீருக்காக அதிக அளவு ஒதுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதனால், 14.75 டி.எம்.சி,. தண்ணீர் தமிழகத்திற்கு குறைந்து, 167.25 டி.எம்.சி., கிடைக்க பெற்று வருகிறது.
இதில், இந்தாண்டு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., என மொத்தம் 40.43 டி.எம்.சி., தண்ணீரை இதுவரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனை தமிழக அரசு கேட்டு பெற்றால் ஒரு போக சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும். பிறகு வடகிழக்கு பருவமழையை கொண்டு சாகுபடியை முடித்து விடலாம். எனவே, கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் மெளனம் கலைக்க வேண்டும் என த்து கேட்டு உரிய நீரை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள அனைத்து அணைகளும் 90 சதவீத நீர் நிரம்பி விட்டது. காவிரியில் துணை நதிகள் அனைத்தும் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது.
ஜூன், ஜூலை மாதத்திற்கு மட்டும் 40 டி.எம்.சி., தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும்.இதனைப் பெற்று விட்டால் ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை பாதுகாத்து விட முடியும். எனவே, உரிய நீரை உடனடியாக பெற தமிழக முதல்வர் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேகதாது அணை கட்டுவதற்கு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கர்நாடக முதல்வர் சித்ராமையா வழங்கியது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக முதல்வர் இது குறித்து வாய் திறக்கவுமில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், காவிரியில் பெற்ற உரிமைகள் பறிபோகும் பேராபத்தை ஏற்பட்டு உள்ளது. முதல்வர் மௌனத்தை கலைத்துவிட்டு, போர்க்கால அடிப்படையில் காவிரி நீரை பெற்று சம்பா சாகுபடி மேற்கொள்வது குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னோடி விவசாயி சீனிவாசன்: டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யபட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜூன்,ஜூலை மாதத்திற்கான உரிய நீரை கேட்டு பெறாமல் தமிழக அரசு துாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளுக்கு மெயில் மூலம் கடிதம் எழுத வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் கர்நாடக அரசிடம் தண்ணீரை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.