Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; ரூ. 3,000 மானியம்

 மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; ரூ. 3,000 மானியம்

 மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; ரூ. 3,000 மானியம்

 மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; ரூ. 3,000 மானியம்

ADDED : டிச 01, 2025 01:27 AM


Google News
மேட்டுப்பாளையம்: காரமடை வட்டாரத்திற்கு, முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு தலா ரூ. 3,000 மானியம் வழங்கப்படுகிறது.

காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

மண்புழு உரம் தயாரிக்க விவசாயி ஒருவருக்கு ரூ.3,000 மானியத் தொகை வழங்கப்படுகிறது. இந்த மானியத்தில் ரூ.1,500 மண்புழு உரப்படுகைக்கும், மீதமுள்ள ரூ.1,500 மண் புழுக்கள், தொழு உரம் மற்றும் உரப்படுகைக்கான ஊன்றுகோல் குச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

இதை காரமடை வேளாண்மை விரிவாக்க மையத்திலும், மேட்டுப்பாளையம் துணை வேளாண்மை விரிவாக்கம் மையத்திலும், பெற்றுக்கொண்டு விவசாயிகள் பயனடையலாம். காரமடை வட்டாரத்திற்கு 50 எண்கள் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஆதார், சிட்டா, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பித்து மானியம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us