Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2026ம் ஆண்டு 'ஸ்பேஸ்'க்கு போகலாம்... ரெடியா நீங்க?

2026ம் ஆண்டு 'ஸ்பேஸ்'க்கு போகலாம்... ரெடியா நீங்க?

2026ம் ஆண்டு 'ஸ்பேஸ்'க்கு போகலாம்... ரெடியா நீங்க?

2026ம் ஆண்டு 'ஸ்பேஸ்'க்கு போகலாம்... ரெடியா நீங்க?

ADDED : ஜூலை 06, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
என்னது... 900 சதுரடியில், 1,000ம் சதுரடிக்கு வசதி செஞ்சு குடுக்குறாங்களா...!

எங்கே... இதுதான் இப்போது 'ஹாட் டாபிக்'.

மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் குடியிருப்பில், என்னென்ன வசதிகள் கொண்டு வரலாம் என்று ஆழமாக சிந்தித்து, ஒரு அமைப்புக்கு கொண்டு வரவே, ரொம்ப காலம் பிடித்தது என்று, சொல்கிறார், 'யுனைடெட் லிவ்விங் ஸ்பேஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் ஷபி.

இவர்களின் விளம்பரத்தில், விண்வெளிக்கு செல்லும் உடையுடன் ஒருவரின் புகைப்படம். வீட்டுக்கும், விண்வெளிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட போது, விண்வெளிக்கு செல்வதை, 'ஸ்பேஸ்'க்கு செல்வது என்போம். அதையே, 'ஸ்பேஸ்' (இடவசதி) வீட்டுக்குள்ளும் தருவோம் என்கிறார்கள்.

வீட்டில் இருக்கக் கூடிய அறைகளை, முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் வசதி செய்து கொடுப்பதுதான் இது. கதவு திறக்க இனி சாவி தேவையில்லை. கதவு திறப்பானில், உங்களுடைய பெருவிரல் கைரேகை வைத்தால் போதும்; கதவு திறக்கப்பட்டு விடும். இது மட்டுமா... 'நம்பர் லாக்' வசதியும் உண்டு.

உள்ளே நுழைந்ததும், காத்திருக்கிறார் 'அலெக்ஸா'. கமாண்ட் கொடுத்தால் அது பார்த்துக்கொள்ளும்.

டைனிங் டேபிளை சுவற்றில் இருந்து இறக்கி, திறந்து மூடும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். நாற்காலி, கட்டில் என, இடத்தை அடைத்துக் கொள்ளாமல், அதை பயன்படுத்தி விட்டு, சுவற்றில் அப்படியே சாய்த்து, இருந்த சுவடே இல்லாமல் ஆக்கி விடுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் யோகா, இல்லை, வீட்டுக்குள்ளேயே மீட்டிங் ஹால் என பயன்படுத்திக் கொள்ள, அங்கும் இதுபோல வசதி இருக்கிறது. அதுவும், சிறிய அறைக்குள்.

இவர்கள், அடுக்குமாடியில் கட்டித்தரும் வீடுகள் எல்லாம், வாஸ்து படி தான் கட்டித் தரப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

மிக முக்கியமான விஷயம்... ஒவ்வொருவரும் பயன்படுத்தக் கூடிய தண்ணீரை, அதை கழிவாக மாற்றி விடாமல், சுத்திகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, எடுத்து வரும் நடவடிக்கை 'வாவ்' சொல்ல வைக்கிறது.

சரவணம்பட்டி - துடியலுார் சாலையில், எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி பின்புறம், 2 ஏக்கரில் தயாராகி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 190 வீடுகள். விலை, ரூ.54 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. 2 பி.எச்.கே. 2.5 பி.எச்.கே. 3 பி.எச்.கே., என தயாராகிறது. 2026ல் 'குடி போகலாம்'.

'ஸ்பேஸ்' பயணத்துக்கு, 99529 94949.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us