Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

ADDED : ஜூலை 08, 2024 07:37 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: ''தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமாக உள்ளது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஆனைமலையில், ஹிந்து முன்னணியின் மாவட்ட கார்யாலயம் திறப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன்பு, காங்., மாவட்ட தலைவர் கொலை, இரண்டு நாட்களுக்கு முன் அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரிகள் சரியில்லை; பயங்கரவாத செயல்கள் அரங்கேறும் அபாயம் உள்ளது. சத்தியமங்கலம், தேனி காடுகளில், பயிற்சி நடக்கிறது என கூறப்படுகிறது.

கோவையில், ரகசிய அமைப்பு புதுசா துவங்கி, அடிக்கடி சந்திப்பதாக தகவல்கள் வருகின்றன. இதையெல்லாம் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

உளவுத்துறையில் சரியான நபர்களை நியமிக்காவிட்டால், சட்ட விரோத செயல்களைதடுக்க முடியாத சூழல் ஏற்படும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், செயல்பாடுகளை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டும்.

கஞ்சா, போதை வஸ்துக்களால், பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us