Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரில் வந்து பஸ்களில் ஏறி திருடிய 4 பேர் கும்பல் கைது

காரில் வந்து பஸ்களில் ஏறி திருடிய 4 பேர் கும்பல் கைது

காரில் வந்து பஸ்களில் ஏறி திருடிய 4 பேர் கும்பல் கைது

காரில் வந்து பஸ்களில் ஏறி திருடிய 4 பேர் கும்பல் கைது

ADDED : ஜூலை 08, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
மருதமலை, : கோவை ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, ரயில்வே ஸ்டேஷன், டவுன் ஹால் உட்பட்ட பகுதிகளில் பிக்பாக்கெட், பஸ்களில் நகை திருட்டு நடப்பதாக, தொடர் புகார்கள் வந்தன. போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பஸ், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி, திருடர்களை தேடி வந்தனர். அப்போது அந்த திருடர்கள், மருதமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

மருதமலை வனப்பகுதியில் நான்கு பேர் கும்பலை போலீசார் பிடித்தனர். அவர்கள், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கமல், 42, காமராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த், 30, ரத்தினபுரியை சேர்ந்த ரமேஷ், 48, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராஜன், 40 என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 20 சவரன் தங்க நகைகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள், காரில் ஏதாவது ஒரு பஸ் நிறுத்தத்திற்கு சென்று, அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியரின் பர்ஸ், நகைகளை திருடி, தப்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரிந்தது. கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us