/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொங்குநாடு கல்லுாரி - விலங்கியல் ஆய்வகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்கொங்குநாடு கல்லுாரி - விலங்கியல் ஆய்வகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொங்குநாடு கல்லுாரி - விலங்கியல் ஆய்வகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொங்குநாடு கல்லுாரி - விலங்கியல் ஆய்வகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொங்குநாடு கல்லுாரி - விலங்கியல் ஆய்வகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 05, 2024 02:50 AM

கோவை:கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கொல்கத்தாவில் நடந்த இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் 100வது நிறுவன நாள் விழாவில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வகம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் மாதன் முன்னிலையில் இந்திய விலங்கியல் ஆய்வக இயக்குனர் தரிதி பானர்ஜி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இவ்விரு நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும், தேசிய மற்றும் உலக அளவில் புகழ் பெற்ற பொது, தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சி நிதியை பெறும் வகையில் இந்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.