Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையை பசுமையாக்கலாம் வாங்க! இலவச மரக்கன்று வழங்குது வனத்துறை

கோவையை பசுமையாக்கலாம் வாங்க! இலவச மரக்கன்று வழங்குது வனத்துறை

கோவையை பசுமையாக்கலாம் வாங்க! இலவச மரக்கன்று வழங்குது வனத்துறை

கோவையை பசுமையாக்கலாம் வாங்க! இலவச மரக்கன்று வழங்குது வனத்துறை

ADDED : ஜூலை 05, 2024 02:50 AM


Google News
கோவை;கோவை மாவட்ட, பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளைப் பெற, வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் சமூக காடுகள் சரகரம், கோவை வனச்சரக நவீன நாற்றங்காலில் இருந்து, நிழல் தரக்கூடிய மரங்கள், பழ வகை மரங்கள், தடி மர வகை நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக பெ.நா.பாளையம் வனச்சரகர் மைனா கூறியதாவது:

பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் 2024-2025ன்கீழ், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

13க்கு 25 செ.மீ., 16க்கு 30 மற்றும் 30க்கு 45 செ.மீ., ஆகிய மூன்று அளவு பைகளில் கல்வி, தொழில் நிறுவனங்கள்மற்றும் விவசாயிகளுக்கு தேவைசார்ந்து வழங்கப்படுகின்றன.

மாதுளை , மகாகனி, கொய்யா, நீர்மருது, சீதா, சவுக்கு, எலுமிச்சை, தேக்கு, நாவல், மகாகனி, இயல் வாகை, செண்பகம், சொர்க்கம், வேம்பு, மந்தாரை, மகாகனி, தான்றி, சரக்கொன்றை, அத்தி, புங்கன், நெட்டிலிங்கம் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இலவச மரக்கன்றுகள் தேவைப்படுவோர், அவர்களின் புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல், பட்டா அல்லது சிட்டா நகல் ஆகியவற்றுடன் அணுக வேண்டும். கோவை, ரேஸ்கோர்ஸில் நாற்றங்கால் உள்ளது. மேலும் விவரங்களுக்கு,

0422-2445522, 9698417897, 7904203235, 7603883303 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us