Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கே.எம்.சி.எச்.ல் பக்கவாதத்துக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை

கே.எம்.சி.எச்.ல் பக்கவாதத்துக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை

கே.எம்.சி.எச்.ல் பக்கவாதத்துக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை

கே.எம்.சி.எச்.ல் பக்கவாதத்துக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை

ADDED : செப் 11, 2025 09:36 PM


Google News
'ப க்கவாதம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையை துவக்கினால், கை, கால் செயலிழப்பை தவிர்க்கவாய்ப்புள்ளது,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன்.

அவர் கூறியதாவது:

மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் திடீரென ஏற்படும் அடைப்பு அல்லது ரத்தக்கசிவால், தேவையான அளவு ரத்த ஓட்டம் இன்றி பக்கவாதம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், விபத்தால் மூளையில் உள்ள ரத்தக்குழாய் வெடிப்புக்கு காரணமாக உள்ளன.

பொதுவாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, இதயம் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு கொழுப்பை சிறு வயதில் இருந்தே சரியான கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மேலும், விபத்துகள், உடலில் ஏற்படும் வேதிப்பொருள் மாற்றங்கள் ஆகியவற்றாலும் பக்கவாதம் ஏற்படலாம். மரபணு ரீதியாக மிக அரிதாகவே இப்பாதிப்பு ஏற்படுகிறது.

முகம் கோணுவது, வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது, பேச்சு குழறுவது, உடலில் ஒரு பக்கம் கை, கால் செயலிழந்து திடீரென பேச முடியாமலும், நடக்க முடியாமலும் போவது பக்கவாதத்துக்கான அறிகுறிகளாகும்.

இத்துடன், மூளையில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து சிலருக்கு தலை சுற்றுதல், திடீர் மறதி, கண் பார்வை மங்குதல் காது கேட்காமல் போதல், கை, கால் மரத்து போவதும் இதற்கான அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் தாமதிக்காமல், சிகிச்சை பெறவேண்டும். நான்கரை மணி நேரத்துக்குள் முதல் கட்ட சிகிச்சை துவக்கினால், கை, கால் செயலிழப்பை முடிந்தவரை தவிர்க்கலாம்.

கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், பிரத்யேக பக்கவாத சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு நோயாளிகளுக்கு உடனடி பரிசோதனைகள் வாயிலாக பிரச்னையை கண்டறிந்து, சிகிச்சையும் துவக்கப்படுகிறது.

நரம்பியல் சிகிச்சை நிபுணர், அறுவை சிகிச்சை குழு, ரேடியாலஜி மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் இப்பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

சிகிச்சைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் அனைத்து வசதிகளும் இங்குள்ளது. சிகிச்சைக்குப்பின், பிசியோதெரபி, நடைபயிற்சி மற்றும் பேச்சு பயிற்சியும் அளிக்கிறோம். தொடர்புக்கு, 75488 55512. இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us