Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்த கேரள தேக்கு மரம்!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்த கேரள தேக்கு மரம்!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்த கேரள தேக்கு மரம்!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்த கேரள தேக்கு மரம்!

ADDED : ஜன 30, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்தூர்;பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரத்திற்கான தேக்கு மரம், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையான கோவில். இக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.

இதற்காக கடந்த செப்., மாதத்தில், கும்பாபிஷேகம் பாலாலயம் செய்யப்பட்டது. அதன்பின், கும்பாபிஷேக பணிகள் படுஜோராக நடந்து வருகிறது.

கும்பாபிஷேகத்தின் போது, கோவில் கொடிமரம் புதியதாக மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடக்கவுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கொடி மரமும் மாற்றப்பட உள்ளது.

இதற்காக, கேரள மாநிலம் பாலா பகுதியில் இருந்து, 57 அரை அடி உயரமும், 5.30 அடி விட்டமும் கொண்ட, 60 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் நேற்று, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

4 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இம்மரத்தை, கோவில் உபயதாரர் வழங்கியுள்ளார். கொடி மரத்தை தயார்படுத்தும் பணி, இரண்டு மாதங்களில் நிறைவடையும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us