/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தண்ணீரை வெளியேற்றிய கேரளா; சிறுவாணி நீர்மட்டம் 2 அடி சரிவு தண்ணீரை வெளியேற்றிய கேரளா; சிறுவாணி நீர்மட்டம் 2 அடி சரிவு
தண்ணீரை வெளியேற்றிய கேரளா; சிறுவாணி நீர்மட்டம் 2 அடி சரிவு
தண்ணீரை வெளியேற்றிய கேரளா; சிறுவாணி நீர்மட்டம் 2 அடி சரிவு
தண்ணீரை வெளியேற்றிய கேரளா; சிறுவாணி நீர்மட்டம் 2 அடி சரிவு
ADDED : ஜூன் 18, 2025 12:28 AM
கோவை; சிறுவாணி அணையில் இருந்து, கேரள நீர்ப்பாசனத் துறையினர் தண்ணீரை திறந்து விட்டதால், நீர் மட்டம், 2 அடி குறைந்திருக்கிறது.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமத்தினருக்கு, சிறுவாணி அணையில் இருந்து தருவிக்கப்படும் தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையின் உயரம், 50 அடியாக இருந்தாலும்,பாதுகாப்பு காரணங்களை கூறி, 44.61 அடிக்கே நீர் தேக்க முடியும் என கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
நேற்று முன்தினம், 43.13 அடியாக நீர் மட்டம் இருந்தது. தொடரும் மழைப்பொழிவு, கிளை அருவிகளில் நீர் வரத்தை சுட்டிக்காட்டி, 90 செ.மீ.,க்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக, நீர் மட்டம், 2 அடி குறைந்திருக்கிறது. 2 அடி தண்ணீரை வெளியேற்றாமல் அணையில் தேக்கியிருந்தால், கோவை மக்களுக்கு, 10 நாட்களுக்கு வழங்க முடியும்.
அணையில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சரி செய்ய, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய விஞ்ஞானிகள் குழு, ஜன., மாதம் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. இரு மாநில அரசுகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து, சீரமைப்பு பணிகளை செய்திருந்தால், அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீரை தேக்கியிருக்கலாம்.
சீரமைப்பு பணி இன்னும் மேற்கொள்ளாததால், நடப்பாண்டும் முழு கொள்ளளவு தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நீர் தேக்கத்தை குறைப்பதால், கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.