/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் கம்பம் மாற்றியமைக்க லஞ்சம்; மின்வாரிய செயற்பொறியாளர் கைது மின் கம்பம் மாற்றியமைக்க லஞ்சம்; மின்வாரிய செயற்பொறியாளர் கைது
மின் கம்பம் மாற்றியமைக்க லஞ்சம்; மின்வாரிய செயற்பொறியாளர் கைது
மின் கம்பம் மாற்றியமைக்க லஞ்சம்; மின்வாரிய செயற்பொறியாளர் கைது
மின் கம்பம் மாற்றியமைக்க லஞ்சம்; மின்வாரிய செயற்பொறியாளர் கைது
ADDED : ஜூன் 18, 2025 12:28 AM

கோவை; சோமனுாரில் மின் கம்பத்தை மாற்றி அமைத்துத்தர, ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற செயற்பொறியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்பிரபு, 36; மென்பொருள் பொறியாளர். இவரது தந்தைக்கு சொந்தமாக, நீலாம்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில், 99 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தில், குறைந்த மின்னழுத்த கம்பி செல்லும் மின் கம்பம் உள்ளது. நிலத்தின் நடுவில் உள்ள இந்த கம்பத்தை, நிலத்தின் ஓரத்தில் மாற்றியமைக்க, செந்தில் பிரபு திட்டமிட்டார்.
மே மாதம் குரும்பபாளையம் மின் பகிர்மான அலுவலகத்துக்கு சென்று, மின் கம்பத்தை மாற்றி அமைக்க,ஆன்லைனின்விண்ணப்பித்தார்.
அதற்கு, செயற்பொறியாளரின் ஒப்புதல் தேவை என்பதால், சோமனுாரில் உள்ள செயற்பொறியாளர் சபரிராஜனை, 57 சந்திக்க, மின்வாரியத்தினர் தெரிவித்தனர். சோமனுார் அலுவலகத்துக்கு, செந்தில்பிரபு மற்றும் அவரது தந்தை சென்றனர்.
அங்கு, மின் கம்பம் மாற்றியமைக்க செயற்பொறியாளருக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என, நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு செந்தில்பிரபு தகவல் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய, 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர். அப்பணத்தை, செயற்பொறியாளர் சபரிராஜன் பெற்று, தனது மேஜைக்குள் வைத்தார்.
அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலகத்துக்குள் சென்று சபரிராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய பணத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.