/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 11, 2025 11:51 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய, 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர் சுரேகா, தயப் பாத்திமா ஆகியோர், 588 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி அட்சயா, 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும் பிடித்தனர்.
ஸ்ரீநிதி, 579 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும்; அன்பல்சா, ஹரிஹரன் ஆகியோர், 578 மதிப்பெண்ணுடன் நான்காமிடமும் பெற்றனர்.
கணிதம், கணினி அறிவியலில் நிரஞ்சனா, 100 மதிப்பெண்கள் பெற்றார். கணினி அறிவியலில், ஹரிஹரன், ஹர்சன், கவின் தீபக், நிர்மல் ஆகியோர் 100 மதிப்பெண் பெற்றனர். கணினி பயன்பாட்டியலில், தயப் பாத்திமா, ஸ்ரீநிதி, மதுஸ்ரீ, தன்யா, செல்வ கவுசிகா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
பொருளியல் பாடத்தில் சுரேகா, தயப் பாத்திமா ஆகியோரும்; வணிகவியலில், அட்சயா, சுரேகா, தயப் பாத்திமா; கணக்குப்பதிவியலில் மதுஸ்ரீ, ஸ்ரீநிதி, சுரேகா ஆகியோர் 100 மதிப்பெண் பெற்றனர்.
570 மதிப்பெண்களுக்கு மேல் ஒன்பது பேர்; 550க்கு மேல் 15 பேர்; 500க்கு மேல் 39 பேர்; 475க்கு மேல் 51 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவியரை, பள்ளியின் தாளாளர் சண்முகம், செயலாளர் உமாமகேஸ்வரி, ஆலோசகர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.