ADDED : மே 11, 2025 11:51 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு பேரூராட்சி, 1வது வார்டில் முறையான சாலை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில், அங்கு கான்கிரீட் சாலை அமைக்க, கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான பூமி பூஜை, எம்.எல்.ஏ., தாமோதரன் தலைமையில் நடந்தது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.