/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளைச்சல் குறைவால் மல்லிகை விலை உயர்ந்தது விளைச்சல் குறைவால் மல்லிகை விலை உயர்ந்தது
விளைச்சல் குறைவால் மல்லிகை விலை உயர்ந்தது
விளைச்சல் குறைவால் மல்லிகை விலை உயர்ந்தது
விளைச்சல் குறைவால் மல்லிகை விலை உயர்ந்தது
ADDED : ஜூன் 24, 2025 12:13 AM

கோவை; காற்று அதிகமாக வீசுவதால், மல்லிகை பூ விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளது.
கோவை பூ மார்க்கெட்டுக்கு ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உதிரிப்பூக்கள் விற்பனை கொண்டு வரப்படுகின்றன. தினமும், 10 டன் முதல், 12 டன் வரை உதிரிப்பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. முகூர்த்தம் மற்றும் விசேஷ காலங்களில் வரத்து அதிகரிக்கும்.
காற்று பலமாக வீசும் ஆனி, ஆடி மாதங்களில் மல்லிகை விளைச்சல் குறைந்து, முல்லை பூ விளைச்சல் அதிகரிப்பது வழக்கம். இப்போது, காற்றுக்காலம் துவங்கி இருப்பதால், மல்லிகை விளைச்சல் குறைந்து விலை அதிகாரித்துள்ளது.
நேற்று கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகை ஒரு கிலோ, 800 ரூபாய் வரை விற்பனையானது. முல்லை, 320 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 350 ரூபாய்க்கும், சாமந்தி 250 ரூபாய்க்கும், அரளி 80 ரூபாய்க்கும், சம்பங்கி 60 ரூபாய்க்கும் விற்பனையானது.
பூ வியாபாரிகள் கூறுகையில் 'ஆனி, ஆடி மாதங்களில் மல்லிகை விலை மட்டும் ஏற்றம், இறக்கமுமாக இருக்கும். மற்ற பூக்கள் விலையில் ஏற்றம் இருக்காது. முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் விலை கூடும். ஆடி பிறந்தால் உதிரிப்பூக்களுக்கு 'டிமாண்ட்' அதிகரிக்கும்' என்றனர்.