/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரு தாலுகாக்களில் ஜமாபந்தி 148 மனுக்கள் ஒப்படைப்பு இரு தாலுகாக்களில் ஜமாபந்தி 148 மனுக்கள் ஒப்படைப்பு
இரு தாலுகாக்களில் ஜமாபந்தி 148 மனுக்கள் ஒப்படைப்பு
இரு தாலுகாக்களில் ஜமாபந்தி 148 மனுக்கள் ஒப்படைப்பு
இரு தாலுகாக்களில் ஜமாபந்தி 148 மனுக்கள் ஒப்படைப்பு
ADDED : மே 24, 2025 06:28 AM

பொள்ளாச்சி, உடுமலை தாலுகாக்களில் நடந்த ஜமாபந்தியில், நேற்று 148 மனுக்கள் பெறப்பட்டன.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராமங்களுக்கு, நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.நேற்று பெரிய நெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ. நாகூர், கொல்லப்பட்டி, போலிக்கவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி கிராமங்களுக்கு நேற்று நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
முதியோர் உதவித்தொகை, விதவைச்சான்று, இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம், 66 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் (பொ) அறிவுறுத்தினார்.
கோலார்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதுார், எஸ். மலையாண்டிப்பட்டணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி கிராமங்களுக்கு வரும், 27ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.
* உடுமலை தாலுகா அலுவலகத்தில், நேற்று வாளவாடி உள்வட்டத்துக்குட்பட்ட, வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதுார், ரெட்டிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், சின்னபாப்பனுாத்து, பெரியபாப்பனுாத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்துார், செல்லப்பம்பாளையம், தேவனுார்புதுார், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குபட்டி கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
கிராம மக்களிடம், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் புஷ்பாதேவி மனுக்களை பெற்றார். நத்தம்பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நில அளவை உள்ளிட்ட 82 மனுக்களை மக்கள் வழங்கினர்.
- நிருபர் குழு -