Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிணறு வெட்டுவதில் பிரச்னை கவனமாக இருக்க 'அட்வைஸ்'

கிணறு வெட்டுவதில் பிரச்னை கவனமாக இருக்க 'அட்வைஸ்'

கிணறு வெட்டுவதில் பிரச்னை கவனமாக இருக்க 'அட்வைஸ்'

கிணறு வெட்டுவதில் பிரச்னை கவனமாக இருக்க 'அட்வைஸ்'

ADDED : மே 24, 2025 06:28 AM


Google News
விவசாய நிலங்களில் கிணறு துார் வாரும் பணியை செய்து தருவதாக கூறி, கூடுதல் கட்டணம் கேட்டு சிலர் பிரச்னையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்,விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாய தொழிலை மேற்கொள்ள ஆட்பற்றாக்குறை நிலவுவதால் களையெடுப்பது துவங்கி, கிணறு வெட்டுவது, பயிர் சாகுபடி, அறுவடை என அனைத்தும் இயந்திரமயமாகி வருகிறது.

அதே நேரம், இப்பணிகளை மேற்கொள்ள வெளியூர்களில் இருந்தும், விவசாயிகள், பணியாளர்களை வைத்து கிணறு வெட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

விவசாய சங்கத்தினர் சிலர் கூறியதாவது: பல்வேறு இடங்களில்,சிலர் கிணறு துார்வாரி தருவதாக கூறி, ஒரு தொகை பேசிக் கொள்கின்றனர். அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.

பணி முடித்த பின், கூடுதல் தொகை கேட்டு பிரச்னையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கேட்ட பணம் கொடுக்காதபட்சத்தில் மிரட்டுகின்றனர்.

தவிர, அரசியல் செல்வாக்குள்ளவர்கள் வாயிலாக நெருக்கடி தருகின்றனர்.எனவே, கிணறு துார்வாருவதற்கு சரியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஒப்பந்த பத்திரம் போன்ற எழுத்துப்பூர்வ ஒப்புதல் பரஸ்பரம் செய்து கொள்ள வேண்டும். துார் வாருவதற்குரிய தொகையை,முன்கூட்டியே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us