/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவிகளுக்கு தைரியம் தந்த 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்மாணவிகளுக்கு தைரியம் தந்த 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்
மாணவிகளுக்கு தைரியம் தந்த 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்
மாணவிகளுக்கு தைரியம் தந்த 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்
மாணவிகளுக்கு தைரியம் தந்த 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்

திட்டங்களுக்கு வரவேற்பு
அத்திட்டங்கள் அமல்படுத்தியபோது, மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. கோவை மாவட்ட போலீசார் கொண்டு வந்த சிறப்பு திட்டங்களில் முக்கியமானதாக, பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் செயல்பட்டது. அப்போதைய எஸ்.பி.,யாக இருந்த பத்ரிநாராயணன் கொண்டு வந்த இந்த திட்டம், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது.
கிடைத்தது தைரியம்
இந்த விழிப்புணர்வின் பலனாய், மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், தைரியம் கிடைத்து, பள்ளி மற்றும் வீட்டுப்பகுதிகளில், தங்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்து, போலீசில் புகார் தெரிவிக்க துவங்கினர்.
மீண்டும் வேண்டும்
தற்போது, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், குட்கா பொருட்கள் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பள்ளிகளின் அருகே உள்ள கடைகளிலும், குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட திட்டம்
கோவை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனுக்காக, மாவட்ட போலீசார் சார்பில், புதிய திட்டம் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அத்திட்டம் துவங்கப்பட்டு, முழுமையாக செயல்படுத்தப்படும்' என்றார்.