/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல் சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல்
ADDED : ஜூன் 10, 2025 09:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள, 9 அரசு பள்ளிகளில் சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக இருந்தது. இதைத் தொடர்ந்து இப்பணியிடங்களை நிரப்ப நேற்று கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு மற்றும் தாசில்தார் கணேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர். தேர்வுக்கு, 57 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 47 விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.