/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூட்டமாக உலா வரும் யானைகள்; கண்காணிப்பு பணியில் வனத்துறை கூட்டமாக உலா வரும் யானைகள்; கண்காணிப்பு பணியில் வனத்துறை
கூட்டமாக உலா வரும் யானைகள்; கண்காணிப்பு பணியில் வனத்துறை
கூட்டமாக உலா வரும் யானைகள்; கண்காணிப்பு பணியில் வனத்துறை
கூட்டமாக உலா வரும் யானைகள்; கண்காணிப்பு பணியில் வனத்துறை
ADDED : ஜூன் 10, 2025 09:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நவமலையில் யானைகள் கூட்டமாக உலா வருவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில், யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக உணவு, குடிநீர் தேவைக்காக யானைகள் கூட்டமாக ஆழியாறு அணைப்பகுதிக்கு வந்து செல்கின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில், யானைகள் கூட்டமாக ரோடுகளில் உலா வருகின்றன. ஆழியாறு கவியருவி, நவமலை ரோடுகளில் யானைகள் கூட்டமாக உலா செல்வதையும், விளையாடிக்கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.
நேற்று நவமலை ரோட்டில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டிருந்தன. அப்போது அவ்வழியாக சென்ற பஸ்சை பார்த்த யானை, பின் தொடர்ந்து சென்று சிறிது துாரத்திலே நின்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து, வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நவமலை பகுதியில் இருந்து வரும் பழங்குடியின மக்கள், மின்வாரிய ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்கலாம். நான்கு சக்கர வாகனங்களில் செல்லலாம். மேலும், பஸ்களில் வனத்துறை ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது,' என்றனர்.