/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரோடுக்காக வெட்டிய 2400 மரங்களுக்கு பதிலாக... நம்பித்தான் ஆகோணும்!24 ஆயிரம் மரங்கள் வளர்ப்பதாக ஆணையம் தகவல்!ரோடுக்காக வெட்டிய 2400 மரங்களுக்கு பதிலாக... நம்பித்தான் ஆகோணும்!24 ஆயிரம் மரங்கள் வளர்ப்பதாக ஆணையம் தகவல்!
ரோடுக்காக வெட்டிய 2400 மரங்களுக்கு பதிலாக... நம்பித்தான் ஆகோணும்!24 ஆயிரம் மரங்கள் வளர்ப்பதாக ஆணையம் தகவல்!
ரோடுக்காக வெட்டிய 2400 மரங்களுக்கு பதிலாக... நம்பித்தான் ஆகோணும்!24 ஆயிரம் மரங்கள் வளர்ப்பதாக ஆணையம் தகவல்!
ரோடுக்காக வெட்டிய 2400 மரங்களுக்கு பதிலாக... நம்பித்தான் ஆகோணும்!24 ஆயிரம் மரங்கள் வளர்ப்பதாக ஆணையம் தகவல்!
ADDED : ஜூலை 19, 2024 10:54 PM
-நமது நிருபர்-
ரோடுகள் விரிவாக்கப்பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நடுவது, வெறும் கண்துடைப்பாக நடந்து வருவது உறுதியாகியுள்ளது.
கோவை நகருக்குள் கடந்த 20 ஆண்டுகளில், ரோடு விரிவாக்கம், பாலங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக, பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
அவினாசி ரோட்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டபட்டன. தடாகம் ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளிலும் விரிவாக்கப் பணிக்காக, எக்கச்சக்கமான மரங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டன.
வாகனப் பெருக்கம் காரணமாக, இந்த ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றாலும், வெட்டப்படும் மரங்களால் நகரின் பசுமை குறைந்து வருகிறது.
இதனால் கோடைக் காலங்களில,் ஒதுங்குவதற்கு கூட நிழல் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ரோடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக, மரங்களை வெட்டினால் ஒன்றுக்கு பத்தாக மரங்கள் வளர்க்க வேண்டும்.
ஐகோர்ட் பிறப்பித்த இந்த உத்தரவை, பெரும்பாலான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மதிப்பதே இல்லை. கோவை நகரில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்றாக பாதியளவு மரங்களைக் கூட வைக்கவில்லை. இது கோர்ட் அவமதிப்பு என்றும், சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் மாற்றாக, மரங்கள் நடப்பட்டதாகத் தெரியவில்லை. உதாரணமாக, கோவை-பொள்ளாச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டபோது, ரோட்டின் இரு புறமும் அடர்த்தியாக இருந்த 2400 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அப்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, எவ்வளவு மரங்கள் வைத்து நடப்பட்டுள்ளன என்ற விபரத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார். அதற்கு, ஆணையத்தின் கோவை பிரிவு திட்ட இயக்குனர் செந்தில்குமார் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், 'கோவை-பொள்ளாச்சி ரோட்டில் வெட்டப்பட்ட 2400 மரங்களுக்குப் பதிலாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 24 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். மரங்கள் வளர்க்கப்பட்டுள்ள 10 கிராமங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த ஊரில் எவ்வளவு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
காட்டம்பட்டி, ஆச்சிபட்டி, கபாலிபாளையம், குரும்பபாளையம், ஒக்கிலிபாளையம், ஆர்.பொன்னாபுரம், புரவிபாளையம், ராசிசெட்டிபாளையம், சந்தேகவுண்டம்பாளையம், சேர்வைக்காரன்பாளையம் ஆகிய கிராமங்களில் மரங்கள் நடப்பட்டுள்ளதாக ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்ட மரங்களில் எவ்வளவு மரங்கள், உயிருடன் உள்ளன என்பது குறித்து தகவல் இல்லை. ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரங்களை வைத்தால்தான், அதில் ஒன்றிரண்டாவது பிழைக்க வாய்ப்புள்ளது என்று கருதியே, இந்த தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றாக வைக்கும் மரங்களின் எண்ணிக்கையே சந்தேகத்துக்குரியதாகவுள்ளது.
வைத்ததில் குறைந்தபட்சம் 2400 மரங்களாவது உயிர் பிழைத்திருந்தால் அதுவே நல்ல விஷயம்தான். இதேபோல, அவினாசி ரோட்டில், செங்கப்பள்ளி-வாளையார் இடையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, அதே ரோட்டிலுள்ள நெடுஞ்சாலைத்துறை இடங்களிலும், சாலைத்தீவுகளிலும் மரங்கள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று மரங்களில் எவ்வளவு உயிருடன் உள்ளது என்பதை, ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தால்தான் உண்மை தெரியவரும்.