/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடைவிடாமல் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அருவி, ஆறுகளில் பெருக்கெடுத்தது மழைவெள்ளம் சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு இடைவிடாமல் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அருவி, ஆறுகளில் பெருக்கெடுத்தது மழைவெள்ளம் சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு
இடைவிடாமல் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அருவி, ஆறுகளில் பெருக்கெடுத்தது மழைவெள்ளம் சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு
இடைவிடாமல் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அருவி, ஆறுகளில் பெருக்கெடுத்தது மழைவெள்ளம் சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு
இடைவிடாமல் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அருவி, ஆறுகளில் பெருக்கெடுத்தது மழைவெள்ளம் சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு

கவியருவியில் வெள்ளம்
மேற்குதொடர்ச்சி மலையில், கனமழை பெய்வதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி வேலி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற ரோடுகளின் முக்கிய பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனம் ஓட்டுநர்கள் சிரமத்துடன் பயணிக்கின்னறர். கிணத்துக்கடவு அடுத்துள்ள 'யுடேர்ன்' பகுதியில் மழைநீர் தேங்கிருப்பதால் வாகன ஓட்டுநர்கள் திரும்பிச் செல்ல சிரமப்படுகின்றனர்.
வால்பாறை
வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீர்மட்டம் உயர்வு
சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், நேற்று முன்தினம் காலை, 12.11 அடி நீர்மட்டம் இருந்தது. இரவில் இடைவிடாமல் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 25.55 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 13 அடி உயர்ந்துள்ளது. இதேபோன்று, பரம்பிக்குளம், ஆழியாறு, அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது.
அருவி, கோவிலுக்குசெல்ல தடை
உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதிகளில், கனமழை பெய்வதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக நேற்றும் அருவிக்கு சுற்றுலா பயணியர், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ரோட்டில் மழைநீர்
உடுமலையில் பிரதான ரோடுகளில், மழை நீர் வடிகால்கள் இருந்தும், அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழை நீர் வெளியேற வழியின்றி ரோட்டில் ஓடியது. உழவர் சந்தை ரோட்டில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: