Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழை காலத்தில் கவனம் மின்வாரியம் எச்சரிக்கை

மழை காலத்தில் கவனம் மின்வாரியம் எச்சரிக்கை

மழை காலத்தில் கவனம் மின்வாரியம் எச்சரிக்கை

மழை காலத்தில் கவனம் மின்வாரியம் எச்சரிக்கை

ADDED : மே 26, 2025 10:47 PM


Google News
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள், மின்சாதன பொருட்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி, துணைமின்நிலைய செயற்பொறியாளர் ராஜா அறிக்கை:

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தரையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வான மற்றும் தொய்வான மின்கம்பிகளை தொட கூடாது. மரங்கள், கிளைகள் ஒடிந்து அருகில் உள்ள மின்கம்பிகள் அல்லது மின்கம்பங்களில் விழுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம்.

ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை தொடுதல் கூடாது. கால்நடைகளை மின்கம்பங்களில் கட்டுதல் கூடாது. மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகில் செல்லவோ, மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டவோ கூடாது.

இடி மின்னலின் போது மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக வேலி போன்ற பகுதிகளில் நிற்க கூடாது. மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க கூடாது. இக்காலகட்டத்தில் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.

அவசர உதவிக்கு, பொள்ளாச்சி துணை மின் நிலையத்தை, 94458 51604, கோமங்கலம் - 94990 50502, மார்ச்சநாயக்கன்பாளையம் - 94458 51611, முத்துார் - 94999 76889, சமத்துார் - 94999 76890, ஆலமரத்துார் துணை மின்நிலையம் - 94999 76864 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us