/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.15 லட்சத்தில் கட்டிய பாலம் திறப்பு ரூ.15 லட்சத்தில் கட்டிய பாலம் திறப்பு
ரூ.15 லட்சத்தில் கட்டிய பாலம் திறப்பு
ரூ.15 லட்சத்தில் கட்டிய பாலம் திறப்பு
ரூ.15 லட்சத்தில் கட்டிய பாலம் திறப்பு
ADDED : செப் 11, 2025 10:16 PM
கோவை; கோவை மாநகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், ரூ.1.07 கோடியில் வளர்ச்சிபணிகளை பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சுண்டக்காமுத்துார், அண்ணா நகர் ரோடு அருகில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில், ரூ.15 லட்சத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை எம்.பி., திறந்து வைத்தார்.
இதுதவிர மழைநீர் வடிகால், சிறுபாலம், பள்ளி மதில்சுவர், கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன.
மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.