/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில்... பணிகள் தீவிரம்!பாறை, மண் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில்... பணிகள் தீவிரம்!பாறை, மண் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில்... பணிகள் தீவிரம்!பாறை, மண் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில்... பணிகள் தீவிரம்!பாறை, மண் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
ஆழியாறு அருகே காண்டூர் கால்வாயில்... பணிகள் தீவிரம்!பாறை, மண் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2024 12:35 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆழியாறு அருகே, காண்டூர் கால்வாய் துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்புக்கு முன், முழு வீச்சில் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்தின் உயிர்நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய், 1963ம் ஆண்டு வெட்டப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அங்கு இருந்து, திருமூர்த்தி அணை வரை, 49.3 கி.மீ., நீளமுள்ள காண்டூர் கால்வாயில் நீர் கொண்டு சென்று பாசனத்துக்கு வினியோகிக்கப்படுகிறது.
காண்டூர் கால்வாய் தரைப்பகுதியிலிருந்து, 400 அடி உயரத்தில் அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது.தற்போது, முதலாம் மண்டல பாசனம் நிறைவடைந்த நிலையில், மூன்று மாதத்துக்கு முன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டது.
பருவமழை பெய்யும் நிலையில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயை, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
துார்வாரும் பணி
பொள்ளாச்சி பகுதியில், 0 - 30 கி.மீ., காண்டூர் கால்வாய் அமைந்துள்ளது. இப்பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 19.2 கி.மீ., துாரத்தில் கால்வாயில் பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன. ஒரு சில பகுதிகளில், பல மாதங்களுக்கு முன் விழுந்த மரங்களும் அகற்றப்படாமல் கிடந்ததை கண்டறிந்தனர். சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, அவற்றை துார்வாரும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலையில், தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யும் நிலையில், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு வைத்து, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காண்டூர் கால்வாயில் விழுந்த கற்கள், மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மொத்தம் உள்ள, 49.3 கி.மீ., துாரத்தில், பொள்ளாச்சி பகுதிக்கு உட்பட்ட, 30 கி.மீ.,க்கும் கால்வாய் துார்வாரி நீர் தடையின்றி கொண்டு செல்ல வழி ஏற்படுத்தப்படுகிறது. ஆண்டு தோறும், இதுபோன்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் தண்ணீர் தடையின்றி கொண்டு செல்ல முடியும். இதற்கான ஆயத்தப்பணிகள், பொக்லைன் வாகன உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
ஆக., 5ம் தேதிக்குள் துார்வாரும் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டு வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு, கூறினர்.