/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராண்ட் பாரடைசில் ஒரு மனை வாங்கினால் மலேசிய பயணம்! கிராண்ட் பாரடைசில் ஒரு மனை வாங்கினால் மலேசிய பயணம்!
கிராண்ட் பாரடைசில் ஒரு மனை வாங்கினால் மலேசிய பயணம்!
கிராண்ட் பாரடைசில் ஒரு மனை வாங்கினால் மலேசிய பயணம்!
கிராண்ட் பாரடைசில் ஒரு மனை வாங்கினால் மலேசிய பயணம்!
ADDED : ஜூன் 26, 2024 02:17 AM

கோவை;கோவை ஸ்கைரேண்ட் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், கோவில்பாளையம், கருவலுார் ரோட்டில், பொன்னேகவுண்டன் புதுார் பகுதியில், 'கிராண்ட் பாரடைஸ்' என்ற பெயரில் வீடு மற்றும் வீட்டுமனைகளை அமைத்துள்ளது.
உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்த வீட்டுமனைகளின் விற்பனை திருவிழாவில், மனைகளை பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, ஸ்லோகன் போட்டி நடந்தது.
இதில், முதல் பரிசாக ஸ்விப்ட் காரை ரவிக்குமார், இரண்டாம் பரிசான ஆல்டோ காரை பூஜிதா, மூன்றாவது பரிசான 50 கிராம் தங்க நாணயங்களை சிவபுண்ணியவதி, சொக்கநாதன், அன்னக்கொடி ஆகிய வாடிக்கையாளர்கள் பெற்றனர்.
ஸ்கைரேண்ட் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கோவை பாபு செல்வக்குமார், ஆனந்த வடிவேல், பங்குதாரர்கள் சத்தியமூர்த்தி, பழனியப்பன், சாந்தகுமார், சதீஷ்குமார், குணசேகர் மற்றும் கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
ஸ்கைரேண்ட் பிராப்பர்ட்டீஸ் நிர்வாக இயக்குனர் கோவை பாபு செல்வகுமார் கூறுகையில், '' கிராண்ட் பாரடைஸ் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விற்பனைத் திருவிழா சிறப்புச் சலுகையில், ஒரு மனை வாங்கினால், இரண்டு பேர் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்,'' என்றார்.