/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.பி.டி.இ.எல்., தேர்வுகளில் இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை என்.பி.டி.இ.எல்., தேர்வுகளில் இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை
என்.பி.டி.இ.எல்., தேர்வுகளில் இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை
என்.பி.டி.இ.எல்., தேர்வுகளில் இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை
என்.பி.டி.இ.எல்., தேர்வுகளில் இந்துஸ்தான் மாணவர்கள் சாதனை
ADDED : ஜூன் 01, 2025 01:36 AM
கோவை :இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல், அறிவியல் மற்றும் வலைதள அடிப்படையிலான பாட உள்ளடக்கங்களை உருவாக்குவதற்காக,தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டத்தை (என்.பி.டி.இ.எல்.,) வழங்குகிறது. முன்னணி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் முன்முயற்சியில் இந்த திட்டம் உள்ளது.
திட்டத்தின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்முள்ள ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்தனர்.
இந்துஸ்தான் கல்லுாரியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு, என்.பி.டி.இ.எல்., தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில், தேசிய அளவில் 11 மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஏழு மாணவர்கள் எலைட் பிளஸ் கோல்ட் அந்தஸ்தைப் பெற்றனர்.
135 ஆசிரியர்கள், மாணவர்கள் எலைட் பிளஸ் வெள்ளியைப் பெற்றனர். 529 ஆசிரியர்கள், மாணவர்கள் எலைட் அந்தஸ்தைப் பெற்றனர். 606 ஆசிரியர்கள், மாணவர்கள் பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
என்.பி.டி.இ.எல்., தேர்வில் சாதித்த மாணவர்கள், ஆசிரியர்களை, கல்லுாரி அறங்காவலர் சரஸ்வதி, இணைச் செயலாளர் பிரியா, முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.