/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை ; சின்னக்கல்லாரில், 12 செ.மீ., வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை ; சின்னக்கல்லாரில், 12 செ.மீ.,
வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை ; சின்னக்கல்லாரில், 12 செ.மீ.,
வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை ; சின்னக்கல்லாரில், 12 செ.மீ.,
வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை ; சின்னக்கல்லாரில், 12 செ.மீ.,
ADDED : ஜூன் 15, 2025 09:56 PM

வால்பாறை; வால்பாறையில் விடிய, விடிய பெய்த கனமழையால், தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லாரில், 12. செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. விடிய, விடிய பெய்த கனமழையினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட் ரோட்டில், நேற்று காலை மரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான மீட்பு படையினர், விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
மழை தீவீரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 100.30 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 2,154 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 889 கன அடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
மேல்நீராறில் (சின்னக்கல்லார்), 12 செ.மீ., மழை பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு: (மி.மீ.,)
சோலையாறு - 70, பரம்பிக்குளம் - 40, ஆழியாறு - 7, வால்பாறை - 68, மேல்நீராறு -128, கீழ்நீராறு - 80, காடம்பாறை -13, மேல்ஆழியாறு-8, சர்க்கார்பதி -28, வேட்டைக்காரன்புதுார் -10, மணக்கடவு -8, துணக்கடவு -38, பெருவாரிப்பள்ளம் - 40, நவமலை -4,பொள்ளாச்சி -4.