ADDED : ஜூன் 15, 2025 09:52 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பொன்மலை (கனக கிரி) வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில், மரம் முறிந்து விழுந்தது.
கிணத்துக்கடவு பொன்மலை (கனக கிரி) வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில், மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
நேற்று காலை நேரத்தில், இதன் அருகே இருந்த பெரிய அளவிலான மரம் பலத்த காற்றுக்கு முறிந்து புளிய மரத்தின் மீது சாய்ந்தது. இதனால், அங்கிருந்த ஒரு சில பைக்குகள் வெளியே எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் மரத்தை அகற்றம் செய்தனர்.
மேலும், இந்த மரத்தை துண்டு துண்டாக அறுத்து, கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர்.