/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜூன் 05, 2025 01:22 AM
கோவை; கோவை பெரியகடை வீதி, பூம்புகார் விற்பனை நிலையத்தில், மரக் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.
இக்கண்காட்சியில், ஈட்டி மரத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மணப்பலகைகள், சாமி சிலை வைக்கும் மண்டபங்கள், இயற்கை காட்சிகள் கொண்ட பேனல்கள், சாமி சிலைகள், யானைகள், ஊஞ்சல்கள், சோபா செட், உணவருந்தும் மேஜை செட் உள்ளிட்ட, பல வகையான மரப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி மற்றும் விற்பனை, வரும் 30 வரை, தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.