ADDED : பிப் 12, 2024 01:12 AM

கோவை;போலீசாருக்கு வருடாந்திர படை திரட்டும், கவாத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு, ஆண்டுதோறும் 'வருடாந்திர படை திரட்டு கவாத்து' என்ற பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கோவை அவிநாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், கவாத்து பயிற்சி நடைபெற்றது.
இதில் மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலர்களாக பணிபுரியும் ஆண், பெண் போலீசார், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு துப்பாக்கியை கையாளுவது உட்பட பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டது.