ADDED : ஜன 13, 2024 01:53 AM
பசுமை கட்டடங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, மாசை குறைத்து இயற்கை வளங்களை சேமிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கிறது.
பசுமை கட்டடங்களை அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் (கொஜினா) உறுப்பினர் தினேஷ்குமார் கூறியதாவது:
பசுமைக் கட்டுமானம், ஒரு கட்டடத்தின் வாழ்க்கைச் சுழற்சியையும், சுற்றுச்சூழலையும், உறுதியான செயல்முறைகளின் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் குறிக்கிறது.
பசுமை கட்டுமானம் அமைப்பதற்கு திட்டமிடல் முதல் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு ஒப்பந்ததாரர், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்என, அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அவசியம்.
பசுமை கட்டுமானம் நடைமுறை விரிவடைந்து, பொருளாதாரம், பயன்பாடு, ஆயுள்ஆகியவற்றின் பாரம்பரிய கட்டட வடிவமைப்புகளை விரிவுபடுத்தியுள்ளது.
பசுமைக் கட்டடம் என்பது, கட்டடத்தின் முழு வாழ்க்கை சுழற்சியின் போது ஆற்றல் சேமிப்பு, நில சேமிப்பு, நீர் சேமிப்பு, பொருள் சேமிப்பு ஆகியவை ஆகும்.
இக்கட்டடங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மாசை குறைத்து, இயற்கை வளங்களை சேமிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கிறது. பசுமை கட்டட தொழில்நுட்பம் குறைந்த நுகர்வு, அதிக செயல்திறன், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இயற்கையான கட்டடம் என்பது, சிறிய அளவில் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதில், கவனம் செலுத்துகிறது.
எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும், திறனை சமரசம் செய்யாமல் தற்போதைய தலைமுறையினரின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
சில பசுமைக் கட்டடங்களில் உள்ள வீடுகளை, மறுசீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும், சாதுர்யமாக பணி மேற்கொண்டு, மறுசீரமைப்பு மற்றும் புதிய கட்டுமானத்துக்கு எளிதாகப் பயன்படுத்தலாம்.
நிலையான-, வடிவமைக்கப்பட்ட கட்டடங்களைக் கண்டறிந்து, அவை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடங்களாக மாற்ற வழி வகை செய்யப்படுகின்றன.
இவ்வாறு, தினேஷ் குமார் கூறினார்.