/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆள் சேர்க்கும் வேலையில் அரசு அதிகாரிகள்! தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிர்ச்சி ஆள் சேர்க்கும் வேலையில் அரசு அதிகாரிகள்! தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிர்ச்சி
ஆள் சேர்க்கும் வேலையில் அரசு அதிகாரிகள்! தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிர்ச்சி
ஆள் சேர்க்கும் வேலையில் அரசு அதிகாரிகள்! தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிர்ச்சி
ஆள் சேர்க்கும் வேலையில் அரசு அதிகாரிகள்! தொண்டாமுத்துார் வட்டாரத்தில் அதிர்ச்சி
ADDED : பிப் 12, 2024 12:48 AM
பேரூர்:'விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம்' என கூறி வரும் நிறுவனத்துக்கு, சில அரசு அதிகாரிகளே ஆட்களை சேர்த்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, 'மை வி3 ஆட்ஸ்' நிறுவனம். இந்நிறுவனம், 'விளம்பரம் பார்த்தும், மருந்து பொருட்கள் வாங்கியும் சம்பாதிக்கலாம்' என, கூறி வருகிறது.
இதில், லட்சக்கணக்கானோர் பணம் செலுத்தி, உறுப்பினர் ஆகியுள்ளனர். 'கிரவுன்' என்ற 'மெம்பர் சிப்'பில் சேர, ரூ. 1.21 லட்சம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், இந்நிறுவனம் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆள் சேர்க்கும் அதிகாரிகள்
இந்நிலையில், கிராமப்புறங்களில், 'வாழவைத்து வாழ் - மை வி3 ஆட்ஸ்' என்ற பெயருடன் கடைகள் பெருகி வருகின்றன. இதுபோன்று, தொண்டாமுத்துார் வட்டாரத்தில் கடைகள் செயல்படுகின்றன.
இக்கடைகளை சில அரசு அதிகாரிகள், பினாமிகள் வாயிலாக நடத்துகின்றனர். அவர்கள் வேலை ஆட்களை, உறுப்பினர்களாக மாற்றி பின்னால் இருந்து செயல்படுகின்றனர்.
ஒரு அரசு அதிகாரியே, 'இத்திட்டத்தில் சேருங்கள் சம்பாதிக்கலாம்' என, கூறுவதால், விவசாயிகள் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து சேர்கின்றனர்.
அரசு பயன், மானியம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி, ஆட்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. கடந்த 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி, நிதி நிறுவன மோசடிகளில் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால், அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார்.
ஆனால், தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சில அரசு அதிகாரிகளே ஆட்களை சேர்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற 'பலே பாண்டி'களை, 'களை' எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.