/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று முதல் சேர அழைப்பு தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று முதல் சேர அழைப்பு
தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று முதல் சேர அழைப்பு
தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று முதல் சேர அழைப்பு
தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று முதல் சேர அழைப்பு
ADDED : பிப் 12, 2024 12:04 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில் இன்று முதல் முதலீடு செய்யலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்ட அறிக்கை:
தங்க பத்திர முதலீட்டு திட்டம் இன்று (12ம் தேதி) முதல், 16ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தது ஒரு கிராம் முதல், 4,000 கிராம் வரை தங்கத்தை முதலீடு செய்யலாம்.
தற்போது ஒரு கிராம், 24 கேரட் தங்கபத்திரத்தின் விலையானது, ஒரு கிராமிற்கு, 6,263 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பத்திரத்தின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகளாகும். தேவை ஏற்படுமாயின், ஐந்து ஆண்டுகள் முடிந்த பின் முன்முதிர்வு செய்து கொள்ள முடியும்.
ஆண்டு வட்டியாக, 2.5 சதவீதம் வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி முதலீட்டாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
தங்கப்பத்திர திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அவற்றின் நகல்களுடன் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.
மேலும், விபரங்களுக்கு விற்பனை பிரதிநிதி கார்த்திக்கை, 90809 17319 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.