/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்! குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!
குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!
குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!
குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!
ADDED : மார் 22, 2025 11:13 PM

'எவ்வளவு வேணாலும் நொறுக்குத்தீனி குடுங்க ... சாப்பிட்டுக்கிட்டே இருப்பா. சாப்பாடு மட்டும் இறங்காது'
-- இப்படி புலம்பாத தாய்மார்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு சாக்லேட், துரித உணவுகள் குழந்தைகளை அடிமைப்படுத்தி விட்டன.
இதனால், குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், ஆரோக்கிய பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிள்ளைகள் அழுதால் சாக்லேட், விளையாட்டில் ஜெயித்தால் சாக்லேட், பிறந்தநாளில் சாக்லேட் என, மகிழ்ச்சி என்றாலே ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருவது, அவர்களின் ஆரோக்கியத்துக்கே உலை வைத்து விடுகிறது.
இந்த பழக்கம் எதிர்காலத்தில் புற்றுநோயை கூட வரவழைக்கும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். அதாவது, நம் குழந்தைகளுக்கு நாமே சிறுக சிறுக, விஷம் கொடுக்கிறோம்.
உடல் பருமனுடன் உள்ள குழந்தைகளுக்கு, குழந்தை பருவம் மட்டுமின்றி எதிர்காலத்தில் மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், டைப் 2 சர்க்கரை, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு படிந்த கல்லீரல் உள்ளிட்ட, பல்வேறு நோய் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சந்தைகளில் புதிது புதிதாக வரும் வண்ணங்கள் நிறைந்த சாக்லேட், பாக்கெட் தீனிகள், துரித உணவு முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும்; உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார், அரசு மருத்துவமனை டாக்டர் செல்வராஜ்.
அவர் கூறுகையில், '' குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் தான் சுவை நரம்புகள் வளர்ச்சியடைகின்றன. அப்போது கொடுத்து பழக்கும் உணவு எதுவானாலும், வாழ்நாள் முழுவதும் விரும்பி உண்பார்கள். அதை தவிர்த்து, சாக்லேட், நிறமிகள், சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை கொடுத்துவிட்டு, 10 வயதில் கீரை சாப்பிடுவதில்லை என புலம்பி பயனில்லை.
ஆறு மாதத்திற்கு மேல், திட உணவு உட்கொள்ள துவங்கும் போது, காய்கறி, கீரைகள், தானிய உணவுகள், சத்தான உணவு முறைகளை பழக்க வேண்டும். பெரியவர்களும் உரிய உணவு முறைக்கு மாறவேண்டியது கட்டாயம்.
ஒரு நாளைக்கு, ஒரு வேளையாவது வீட்டில் தானிய உணவு சமைக்க வேண்டும். சிறு வயது முதல் தவறான உணவு பழக்கங்களுக்கு மத்தியில், வளரும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகம், '' என்றார்.
குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் தான், சுவை நரம்புகள் வளர்ச்சியடைகின்றன. அப்போது கொடுத்து பழக்கும் உணவு எதுவானாலும், வாழ்நாள் முழுவதும் விரும்பி உண்பார்கள். சாக்லேட், நிறமிகள், சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை அந்த வயதில் கொடுத்துவிட்டு, 10 வயதில் கீரை சாப்பிடுவதில்லை என புலம்பி பயனில்லை. சிறு வயது முதல் தவறான உணவு பழக்கங்களுக்கு மத்தியில், வளரும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகம்.