/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்சில் செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது பஸ்சில் செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது
பஸ்சில் செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது
பஸ்சில் செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது
பஸ்சில் செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது
ADDED : மார் 22, 2025 05:02 AM
கோவை; பஸ்சில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட, இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த 11ம் தேதி பொள்ளாச்சியை சேர்ந்த ஈஸ்வரி, 54 என்பவர் தனது மகன் வீட்டிற்கு செல்வதற்காக பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை வந்தார். பஸ்சில் இருந்து இறங்கும் போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க செயின் மாயமாகியிருந்தது. ஈஸ்வரி பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெண்கள் இருவர் செயினை பறித்துக்கொண்டு சென்றது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராதா, 36 மற்றும் முருகேஸ்வரி, 35 என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.