ADDED : ஜூன் 10, 2025 09:38 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
பக்தர்கள் விளக்கு மற்றும் வேல் கையில் ஏந்தி மலையை சுற்றி அரோகரா கோஷங்கள் முழங்க கிரிவலம் சென்றனர். தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.